iPhone சாதனத்தில் உள்ள உடல்நலத் தரவுகள் குறித்த அறிமுகம்
உடல்நலம் செயலியானது உங்கள் iPhone, iPad, Apple Watch சாதனங்கள், இணக்கமான மூன்றாம் தரப்பு செயலிகள், இணைக்கப்பட்ட சாதனங்கள் ஆகியவற்றில் இருந்து உங்கள் உடல்நலத் தகவல்களைப் பாதுகாப்பாக சேமிக்கிறது. உடல் அளவீடுகள், அறிகுறிகள், மாதவிடாய் சுழற்சி குறித்த தகவல்கள் மற்றும் பல தரவுகளை நீங்கள் நேரடியாக உள்ளிடலாம்.
Siri: ஆதரிக்கப்படும் மாடல்களில், Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி, இதுபோன்ற எதையேனும் கேளுங்கள், “What’s my heart rate?” அல்லது “How far have I walked today?”(சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் இது கிடைப்பதில்லை). Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

iPhone சாதனத்தில் உள்ள உடல்நலத் தரவு
பின்வருபவை உட்பட முக்கியமான உடல்நலத் தரவுகளை iPhone தானாகவே சேமித்து பகுப்பாய்வு செய்யும்:
காலடிகள், ஏறும் படிக்கட்டுகள் மற்றும் வாக்கிங் போன்ற பிற தரவுகள்: உங்கள் iPhone சாதனத்தில் உள்ளமைக்கப்பட்ட சென்சார்கள் நீங்கள் நடக்கும் காலடிகளின் எண்ணிக்கை, நீங்கள் ஏறும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை, உங்கள் நடையின் வேகம் மற்றும் பலவற்றைப் பதிவுசெய்யும். உடல்நலம் செயலியில் உள்ள “செயல்பாடு” பிரிவில் இந்தத் தரவுகளைப் பற்றிய ஹைலைட்கள், உடல்நல நிலவரங்கள் மற்றும் விவரங்களைத் தேடிப்பார்க்கலாம்.
நகர்வுநிலைத் தரவு: நடையின் சமச்சீரின்மை, டபுள் சப்போர்ட் டைம் போன்ற மற்றும் பல முக்கியமான நகர்வுநிலை அளவீடுகளை iPhone சேமிக்கும். காலப்போக்கில், உங்கள் iPhoneஐ பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நடக்கும்போது அல்லது அதை உங்கள் இடுப்புக்கு அருகில் அணியும்போது, இந்த அளவீடுகள் உங்கள் நடையின் சீரான தன்மையைக் கணக்கிடவும் பதிவுசெய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தரவை நீங்கள் “நகர்வுநிலை” பிரிவில் தேடிப்பார்க்கலாம். உங்கள் நிலைத்தன்மை குறைந்துகொண்டே வருவதால் அடுத்த 12 மாதங்களில் நீங்கள் கீழே விழுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் நீங்கள் அறிவிப்பைப் பெறுவதுடன் பிறருடன் உங்களின் அறிவிப்பைப் பகிரவும் செய்யலாம்.
ஹெட்ஃபோன் ஆடியோ நிலை அளவுகள்: இணைக்கப்பட்ட AirPods, EarPods அல்லது பிற இணக்கமான ஹெட்ஃபோன்களில் இருந்து பெறப்படும் ஆடியோ நிலை அளவீடுகள் உடல்நலம் செயலியில் தானாகவே சேமிக்கப்படும். உங்கள் ஹெட்ஃபோனில் கேட்கும் ஒலியளவு வழக்கங்களை நீங்கள் புரிந்துகொள்ள உதவியாக “செவித்திறன்” பிரிவில் உள்ள இந்தத் தரவை நீங்கள் சரிபார்க்கலாம்.
உறங்கிய நேரம்: நீங்கள் உடல்நலம் செயலியில் உறக்க அட்டவணையை அமைத்தால், நீங்கள் உறங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படுக்கையில் இருக்கும் கால அளவை iPhone மதிப்பீடு செய்கிறது. உங்கள் உறக்க இலக்குகளை அடைவதற்கு உதவியாக உறக்கப் பிரிவில் உள்ள இந்தத் தரவை நீங்கள் சரிபார்க்கலாம்.
உங்கள் மருத்துவச் சேவை வழங்குநர்களிடமிருந்து உடல்நலப் பதிவுகள்: உங்கள் ஒவ்வாமை, மருத்துவ நிலைமைகள், மருந்துகள் போன்றவற்றுக்கான உடல்நலப் பதிவுகளின் தானியங்கு பதிவிறக்கங்களை நீங்கள் அமைக்கலாம் (அனைத்து நாடுகள் மற்றும் வட்டாரங்களில் கிடைப்பதில்லை). உடல்நலம் செயலியில் நீங்கள் இந்தப் பதிவுகளைத் தேடிப்பார்க்கலாம்.
Apple Watch சாதனத்தில் உள்ள உடல்நலத் தரவு
Apple Watch உடன் நீங்கள் இந்த iPhoneஐ இணைத்த பிறகு, இதயத்துடிப்பு வீதம் மற்றும் இரத்த ஆக்ஸிஜன் அளவீடுகள் Apple Watchஇல் இருந்து உடல்நலம் செயலிக்கு அனுப்பப்படும். அவற்றை “இதயம் மற்றும் சுவாசம்” பிரிவில் உள்ள ஹைலைட்கள், உடல்நல நிலவரங்கள் மற்றும் விவரங்களில் தேடிப்பார்க்கலாம். பின்வருபவை உட்பட, “உடல்நலம்” செயலிக்கு கூடுதல் தகவல்களை அனுப்ப நீங்கள் Apple Watchஐ அமைக்கலாம்:
உடற்பயிற்சி நிமிடங்கள் மற்றும் பிற செயல்பாட்டு அளவீடுகள்: iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் உள்ள செயல்பாடு பிரிவில் இந்த அளவீடுகளை நீங்கள் பார்க்கலாம்.
பகல் நேரத்தில் நேர வரலாறு (Apple Watch SE இரண்டாம் தலைமுறை, Apple Watch Series 6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு, மற்றும் அனைத்து Apple Watch Ultra மாடல்கள்): Apple Watchஇல் உள்ள ஆம்பியன்ட் லைட் சென்சார் நீங்கள் பகல் நேரத்தில் எவ்வளவு நேரம் செலவிட்டீர்கள் என்பதைக் கணக்கிடுகிறது. iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் பிற தரவு பிரிவில் உள்ள விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.
அதிக அல்லது குறைவான இதயத் துடிப்பு, குறைவான கார்டியோ ஃபிட்னஸ் (watchOS 7.2 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில்) மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் (எல்லா நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைக்காது) குறித்த அறிவிப்புகள்: “இதயம்” பிரிவில் இந்த அறிவிப்புகளைப் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சூழல் இரைச்சல் ஒலியளவுகள் மற்றும் உரத்த ஒலிகளைப் பற்றிய அறிவிப்புகள்: “செவித்திறன்” பிரிவில் உங்கள் சுற்றுப்புற இரைச்சல் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
“உயிர்க்கூறு அளவீடுகள்” செயலியில் இரவுநேர உடல்நல அளவீடுகள்: உங்கள் அன்றாட உடல்நல நிலையைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள இதயத்துடிப்பு, சுவாசம், மணிக்கட்டு வெப்பநிலை, இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, உறக்க கால அளவு போன்ற இரவுநேர உடல்நல அளவீடுகளைப் பார்க்கலாம். பல இரவுகளில் நீங்கள் உறங்கும்போது உங்கள் Apple Watchஐ அணிந்திருந்தால், உயிர்க்கூறு அளவீடுகள் செயலி உங்கள் ஒவ்வொரு உடல்நல அளவீட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயிக்கும். உங்கள் வழக்கமான வரம்பிற்கு உட்படாமல் பல அளவீடுகள் இருந்தால், மருந்துகள் அல்லது நோய் போன்ற சூழல் காரணிகளால் அவ்வாறு இருக்கலாம் என்ற ஒரு அறிவிப்பைப் பெறுவீர்கள். “உயிர்க்கூறு அளவீடுகள்” பிரிவில், உங்கள் இரவுநேர உயிர்க்கூறு அளவீடுகள் பற்றிய விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.
கீழே விழுதல்களின் வரலாறு ( Apple Watch SE மற்றும் Apple Watch Series 4 மற்றும் அதற்குப் பிந்தையவை): “பிற தரவுகள்” பிரிவில், நீங்கள் எத்தனை முறை விழுந்தீர்கள் என்பதற்கான விவரங்களைப் பார்க்கலாம்.
உறக்கம் செயலியில் உள்ள உறக்க மதிப்பெண்: நீங்கள் எவ்வளவு நேரம் உறங்கினீர்கள், சமீபத்திய வரலாற்றின் அடிப்படையில் நீங்கள் உறங்கிய நேரத்தின் நிலைத்தன்மை, உறங்கும்போது விழித்திருந்த நேரத்தின் அளவு மற்றும் காலம் ஆகியவற்றுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட உறக்க மதிப்பெண்ணை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் விழித்தெழுந்து சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் உறக்க மதிப்பெண் காட்டப்படும். முந்தைய நாள் இரவு நீங்கள் உறங்கிய நேரம், ஒவ்வொரு உறக்க நிலையிலும் செலவிடப்பட்ட நேரம், கடந்த 14 நாட்களுக்கான உறக்கச் சராசரி ஆகியவற்றையும் நீங்கள் பார்க்கலாம். “உறக்க மதிப்பெண்” பற்றிய விவரங்களை “உறக்கம்” பிரிவில் பார்க்கலாம்.
உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கும் அறிவிப்புகள் (Apple Watch Series 9, Apple Watch Ultra 2 மற்றும் பிந்தைய மாடல்கள்): உங்கள் இதயத் தரவை ஆய்வு செய்ய Apple Watchஐ அணியலாம். இந்தத் தரவை உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் கண்டறியப் பயன்படுத்தலாம். உங்கள் Apple Watch உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தால், அவற்றைப் பற்றி உங்கள் மருத்துவச் சேவை வழங்குநருடன் கலந்துரையாட உங்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். 7-நாள் காலகட்டத்திற்கு அளவீடுகளை எடுக்க ஒரு மூன்றாம் தரப்பு இரத்த அழுத்தமானியைப் பயன்படுத்தும்படியும் உங்களுக்கு அறிவுறுத்தப்படும். “இதயம்” பிரிவில் இரத்த அழுத்தம் குறித்த அறிவிப்புகளைப் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
Apple Watchஇல் இருந்து பெறப்படும் உடல்நலத் தரவுகளைப் பற்றி மேலும் அறிய, Apple Watch பயனர் வழிகாட்டியில் உடல்நல அம்சங்களைப் பயன்படுத்தத் தொடங்குதல், பகல் நேரத்தில் செலவழித்த நேரம், இரைச்சல் அளவுகளை அளவிடுதல், உங்கள் உயிர்க்கூறு அளவீடுகளைக் கண்காணித்தல், கீழே விழுதலை நிர்வகித்தல், உங்கள் உறக்க மதிப்பெண் மற்றும் உறக்க வரலாற்றைப் பார்த்தல், உயர் இரத்த அழுத்தம் குறித்த அறிவிப்புகளைப் பெறுதல் ஆகிய கட்டுரைகளைப் பார்க்கவும்.
பிற செயலிகள் மற்றும் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட உடல்நலத் தரவு
உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் செயலிகளை App Storeஇல் இருந்து நீங்கள் பதிவிறக்கி அமைக்கும்போது, அவை உடல்நலம் செயலியுடன் தரவைப் பகிர்வதை அனுமதிக்க, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இரத்த அழுத்த மானிட்டர்கள் மற்றும் வெயிட் ஸ்கேல்கள் போன்ற சாதனங்களிலிருந்து தரவைச் சேமிப்பதற்கு, அவற்றை அமைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும். Bluetooth® சாதனங்கள் iPhone உடன் இணைக்கப்பட வேண்டும்.
குறிப்பு: செயலிகள் மற்றும் சாதனங்களுக்கான உடல்நலத் தரவு அனுமதிகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.
நீங்கள் நேரடியாகச் சேர்க்கும் தரவு
உங்கள் மாதவிடாய் சுழற்சிகள், மருந்துகள், உடல் அளவீடுகள் மேலும் பலவற்றைப் பற்றிய தரவுகளை நீங்கள் நேரடியாக உள்ளிடலாம்.
உங்கள் மாதவிடாய் சுழற்சியைப் பற்றிய தகவல்களைச் சேர்க்க: மாதவிடாய் சுழற்சித் தகவல்களைப் பதிவுசெய்வதன் மூலம், மாதவிடாய் மற்றும் கருவுறுதல் காலம் குறித்த கணிப்புகளைப் பெறலாம். உடல்நலம் செயலியில் மாதவிடாய் சுழற்சித் தகவலைப் பதிவுசெய்தல் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் கூடுதல் மருந்துகளைச் சேர்க்க: இவற்றைச் சேர்ப்பதன் மூலம் அவற்றை எடுத்துக்கொள்வதற்கான நினைவூட்டல்களைப் பெறுவதுடன் அவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம். உடல்நலம் செயலியில் உங்கள் மருந்துகளைக் கண்காணித்தல் என்பதைப் பார்க்கவும்.
உறக்க அட்டவணையை அமைக்க: படுக்கைக்குச் செல்வதற்கும் எழுந்திருப்பதற்கும் குறிப்பிட்ட நேரத்தைத் திட்டமிடுவது உங்கள் உறக்க இலக்குகளை அடைய உதவும். உடல்நலம் செயலியில் ஸ்லீப் ஃபோகஸ் அட்டவணையை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.
மருத்துவ ஐடி ஒன்றில் தகவலைச் சேர்க்க: உங்கள் மருத்துவ நிலைமைகள், மருந்துகள், அவசரகால தொடர்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை அவசரகால மருத்துவ ஐடியில் வழங்கலாம். உங்கள் iPhone லாக் செய்யப்பட்டிருந்தாலும் முதலில் பதிலளிப்பவர்களும் மற்றவர்களும் இந்த முக்கியமான தகவலை உங்கள் சாதனத்தில் நேரடியாகப் பார்க்கலாம். உங்கள் மருத்துவ ஐடியை அமைத்துக் காட்சிப்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.
பிற உடல்நல வகைகளில் தகவலைச் சேர்க்க: உடல்நலம் செயலியில் கீழ் வலதுபுறம் உள்ள
-ஐத் தட்டி, வகையைத் தட்டி, நீங்கள் புதுப்பிக்க விரும்பும் தரவுக்காக
-ஐத் தட்டவும். மேல் வலதுபுறம் உள்ள “தரவைச் சேர்” என்பதைத் தட்டவும்.
முக்கியம்: iPhone, iPad மற்றும் Apple Watch ஆகியவை மருத்துவ சாதனங்கள் அல்ல. iPhoneக்கான முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் என்பதைப் பார்க்கவும்.